Posts

Showing posts from December, 2009

அவள்!

அவள்! பெங்களூர்,மடிவாலாவில் உள்ள அந்த பிக் பஜாரில்,வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு,பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.வாரக் கடைசி ஆதலால்,கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது.வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது.கால மாற்றதினாலும்,பொருளாதார மாற்றதினாலும்,அரிசி,பருப்பில் தொடங்கி காய்கறி வரை எல்லா பொருட்களும்,குளிரூட்டப்பட்ட அந்த ஒரே கட்டிடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.இனி என்ன செய்ய போகிறார்கள் மளிகைக்கடை அண்ணாச்சிகளும் ,கீரைக்கார அக்காக்களும் ,பால் கார பெரியம்மாக்களும் என்ற கேள்வி என்னுள் ஓடிக் கொண்டு இருந்தது.அப்பொழுது எனக்கு ரெண்டு பேருக்கு முன்னால் நின்று கொண்டு இருந்த பெண்,தனது கைத் தொலைபேசியில்,யாரிடமோ சன்னமான குரலில் தமிழில் பேசிக் கொண்டு இருந்தாள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு,பெங்களூர் வந்த புதிதில் யார் தமிழில் பேசினாலும் உடனே திரும்பி பார்க்க தோன்றும்.இப்பொழுது அப்படி இல்லை,தெருவோரக் கடைகளிலே தமிழில் பேரம் பேச முடிகிறது.அந்தப் பெண்,தமிழில் பேசியது என் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும்,அந்தக் குரல் எனக்க...