Posts

Showing posts with the label தமாசு

IT நாடோடிகள்

Image
IT நாடோடிகள் சசிகுமார்,பரணி,விஜய் மூவரும் வேறு வேறு IT கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள்.ஒரு நாள் சசிகுமார் வீட்டுக்கு வரும் அவனது நண்பர்கள் பாலா மற்றும் அருண் இருவரும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் பாதி நாள் வேலை இல்லை என்றும் "career growth" நினைச்சு ரொம்ப பயமாக இருக்கிறது என்றும் புலம்புகிறார்கள்.பரிதாபப்படும் சசிகுமார் பாலாவுக்கு தனது கம்பெனி-லயும்,பரணி அருணுக்கு தனது கம்பெனி-லயும்,refer செய்து வேலை வாங்கி கொடுக்கிறார்கள்.ஒரு மாதம் கழித்து பாலா,"Onsite Oppurtunity" என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும்,அருண் வேலை "hectica" இருக்கு என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும் மாறி விடுகிறார்கள்.விஷயம் தெரிந்து டென்ஷன் ஆகும் சசிகுமார் குரூப்,என்ன செய்வதென்று கன்யாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே வைத்து discuss செய்கிறார்கள்.இறுதியாக இருவரையும் கடத்துவது என்றும்,ஆளுக்கு ஒரு "C++" program கொடுத்து எழுத செய்வது என்றும் முடிவெடுகிறார்கள்.ஆரம்பமாகிறது பர பர கிளைமாக்ஸ். "சம்போ சிவ சம்போ..........

என்னதான் பண்றோம்?

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?.அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாபிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல,இங்கிலாந்து-ல இருக்குற Bank,இல்ல எதாவது கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.இவங்கள நாங்க "Client" nu சொல்லுவோம்." "சரி" "இந்த மாதிரி Client-a மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.இவங்க பேரு "Sales Consultants,Pre-Sales Consultants....".இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?.ஆயிரத்தெட்டு கேள...