புரிந்துகொள்ளப்படாத உணர்வுகள்
February 14,2009,மெரினா பீச்.ஆயிற்று இன்றோடு இரண்டு வருடங்கள்,சுரேஷ் தனது காதலை ஜெனிபிர்-இடம் சொல்லி.முதலில் சிறிது போக்கு காட்டியவள் அப்புறம் சம்மதித்தாள்.அப்புறம் வழக்கம்போல் பீச்,பார்க் என்று காதல் வளர்ந்தது. "எத்தன நாளாதான் இப்படி கடலையே பார்த்து கிட்டு இருக்கிறது சுரேஷ்?" "போர் அடிச்சா சொல்லு,வேணும்னா இந்த பக்கமா திரும்பி உட்கார்ந்துக்கலாம்" "சும்மா நக்கல் பண்ணாத.எனக்கு வீட்டுல பைய்யன் பார்க்க ஆரம்பிச்சிடாங்க.இதுக்கு மேல delay பண்ண முடியாது" "அதுவும் கரெக்ட் தான்.வாங்குற சம்பளத்துல பாதி சுண்டலுகே போயிடுது" "வீட்டுல சரின்னு சொல்லுவாங்களா?கொஞ்சம் பயமா இருக்கு" "கஷ்டம் தான்.என்னதான் உலகம் முன்னேறினாலும்,காதல்னா பேரெண்ட்ஸ் கொஞ்சம் பயப்பட தான் செய்யுறாங்க.நாம வேற,வேற வேற மதம்.பார்க்கலாம்.தெரிஞ்சுதான லவ் பண்ணினோம்." "hm..ஆனா ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி பேரெண்ட்ஸ் சம்மதத்தோட தான் நம்ம marriage பண்ணனும்." "கண்டிபா.சரி கிளம்பலாம்.நீ உங்க வீட்டுல மெதுவா பேச்ச ஆரம்பி.நான் அடுத்த தடவை ஊருக்கு போகும் போது அப்பாகிட்ட பே...