புரிந்துகொள்ளப்படாத உணர்வுகள்
February 14,2009,மெரினா பீச்.ஆயிற்று இன்றோடு இரண்டு வருடங்கள்,சுரேஷ் தனது காதலை ஜெனிபிர்-இடம் சொல்லி.முதலில் சிறிது போக்கு காட்டியவள் அப்புறம் சம்மதித்தாள்.அப்புறம் வழக்கம்போல் பீச்,பார்க் என்று காதல் வளர்ந்தது.
"எத்தன நாளாதான் இப்படி கடலையே பார்த்து கிட்டு இருக்கிறது சுரேஷ்?"
"போர் அடிச்சா சொல்லு,வேணும்னா இந்த பக்கமா திரும்பி உட்கார்ந்துக்கலாம்"
"சும்மா நக்கல் பண்ணாத.எனக்கு வீட்டுல பைய்யன் பார்க்க ஆரம்பிச்சிடாங்க.இதுக்கு மேல delay பண்ண முடியாது"
"அதுவும் கரெக்ட் தான்.வாங்குற சம்பளத்துல பாதி சுண்டலுகே போயிடுது"
"வீட்டுல சரின்னு சொல்லுவாங்களா?கொஞ்சம் பயமா இருக்கு"
"கஷ்டம் தான்.என்னதான் உலகம் முன்னேறினாலும்,காதல்னா பேரெண்ட்ஸ் கொஞ்சம் பயப்பட தான் செய்யுறாங்க.நாம வேற,வேற வேற மதம்.பார்க்கலாம்.தெரிஞ்சுதான லவ் பண்ணினோம்."
"hm..ஆனா ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி பேரெண்ட்ஸ் சம்மதத்தோட தான் நம்ம marriage பண்ணனும்."
"கண்டிபா.சரி கிளம்பலாம்.நீ உங்க வீட்டுல மெதுவா பேச்ச ஆரம்பி.நான் அடுத்த தடவை ஊருக்கு போகும் போது அப்பாகிட்ட பேசுறேன்".
Jenifer தான் முதலில் அவள் அம்மாவிடம் பேசினாள்.எதிர்பார்த்த மாதரியே அவள் அம்மா மிகவும் புலம்பினாள்.
"ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சே"
"இதுக்கு தான் அன்னைகே இவள வேலைக்கு அனுப்ப வேண்டாம்னு சொன்னேன்."
"நம்ம குடும்பத்துல யாருமே வெளி மதத்துல கல்யாணம் பண்ணினது இல்ல"
விஷயம் அன்று இரவே Jenifer-in அப்பாவுக்கு தெரிய வந்தது.படித்தவர்,நாகரிகம் தெரிந்தவர்.பதடப்படவில்லை.மகளை கூப்பிட்டு விசாரித்தார்.
"பைய்யன் என்னமா பண்றான்?"
"Software தான்பா.என்னோட companyla தான் work பண்றார்."
"எத்தனை நாளா தெரியும்?"
"8 வருஷமா.ஒரே காலேஜ் தான்.2 வருஷமா தான் லவ்..""குடும்பம்?"
"அப்பா மட்டும் தான்,ஊருல இருகார்.அம்மா கொஞ்ச வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க."
"எந்த ஊரு மா?"
"Native தென்காசிபா.நம்ம சொந்த ஊரு Nazerth பக்கம் தான்."
"நான் அந்த பையன சந்திக்க முடியுமா?" Jeniferu-ku ஆச்சர்யமாக இருந்தது.அப்பா கோவபடுவார்,நிறைய அட்வைஸ் பண்ணுவார் என்று நினைத்திருந்தாள்.
"கண்டிபா பா" என்றாள் உற்சாகத்தோடு.
அடுத்த நாளயே சுரேஷ்-கு போன் பண்ணி அந்த வாரம் Sunday ப்ரீயா என்று கேட்டாள்.சுரேஷ்-கு தயக்கமாக இருந்தது.அப்பாவிடம் சொல்லாமல் தான் கல்யாண பேச்சை ஆரம்பிப்பது தவறு என்று தோன்றியது.இருந்தாலும் வேறு வழி இல்லை.இரண்டு பேருடைய அப்பாவையும் முதலில் பேச வைத்து,எதாவது வார்த்தைகள் தடித்து,எதுக்கு பிரச்னை?.முதலில் நாம் பேசுவோம்,ஒத்து வந்தால் அப்பாவிடம் பேசலாம்.அந்த sunday woodlands-il வைத்து சந்திப்பது என்று முடிவானது.
Woodlands Hotel.Jenifer-in அப்பா முன்பு அமர்திருந்தான் சுரேஷ்.பக்கத்தில் Jenifer.அவர் தான் முதலில் ஆரம்பித்தார்.நேராகவே விஷயதிற்கு வந்தார்.
"உங்கள பத்தி Jenifer சொன்னாள்.நீங்க எதாவது சொல்ல விரும்புகறீர்களா?"
சொல்ல ஆரம்பித்தான்.தன்னை பற்றி,தனது தொழிலை பற்றி,குடும்பம் பற்றி எல்லாம் கூறினான்.தன்னுடைய பலத்தை விட பலவீனத்தையே அதிகம் முன்னிறுத்தினான்.
"எனக்கு அம்மா,அக்கா எல்லாம் கிடையாது.Jenfier கண்டிபாக அவளது அம்மாவை miss பண்ணுவாள்" என்றான்.
"எனக்கு அம்மா,அக்கா கிடையாது.அதனால் உங்கள் பொண்ணுக்கு மாமியார் கொடுமை,நாத்தனார் கொடுமை எல்லாம் இருக்காது" என்று சொல்லுபவர்கள் மத்தியில் வித்தாயசமாக தெரிந்தான்.
"உங்க வீட்டுல பேசிடீங்களா?"
"இன்னும் இல்லை"
"பேசுங்க.பேசிட்டு சொல்லுங்க.அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்.எனக்கு எந்த பிரச்னையும் இல்ல"
விடைபெற்றார்கள்.Jeniferu-ku நடப்பதை நம்ப முடியவில்லை.நிறைய அழ வேண்டி இருக்கும்,போராட வேண்டி இருக்கும் என்று நினைத்திருந்தாள்.
அதற்கு அடுத்த வாரமே சுரேஷ் ஊருக்கு கிளம்பினான்.இரவு உணவு , அப்பாதான் தோசை வார்த்து கொடுத்தார்.பேச்சை ஆரம்பித்தான் சுரேஷ்.
"அப்பா உங்க கிட்ட ஒரு முக்கியிமான விஷயம் பேசணும்"
"சொல்லுபா"
"கொஞ்சம் முக்கியமான விஷயம்" - தயங்கினான்.
"என்னப்பா எதாவது லவ் பண்றியா?" அப்பாவுக்கு தெரியாதா பிள்ளைகளை பற்றி.
"ஆமாபா"
"ஏன்பா? அப்பாவால உனக்கு ஒரு நல்ல பொண்ண பார்க்க முடியாதுன்னு நினைச்சுட்டியா?"
"இல்லபா.நல்லா தெரிஞ்ச பொண்ணு.8 வருஷமா பழக்கம்.முன்ன பின்ன தெரியாத பொண்ண கல்யாணம் பண்ணுவதை விட இது பெட்டெர் இல்லையா?"
அமைதியாக சுவரில் மாட்டி இருந்த அவன் அம்மா கமலாமாள் புகைப்படத்தை திரும்பி பார்த்தார்.
"உன் அம்மா முகத்தை நான் கல்யாணத்து அன்னைக்கு காலைல தான் சரியாய் பார்த்தேன்.சரி,அது அந்த காலம்.பொண்ணு பேரு என்னபா?"
"Jenifer"சிறிது திடுகிட்டார்.சுரேஷ் அதனை கவனித்தான்.
"christiyana-pa?"
"ஆமாப்பா.வேணும்னா ஹிந்துவா கன்வெர்ட் பண்ண சொல்லிடலாம்.Jenifer அதுக்கு ரெடியா தான் இருக்கா."
சிரித்தார்."எதுக்குப்பா?மனுஷன் தன்னோட வசதிக்காக உருவாகினதுதான் ஜாதி,மதம்,சம்பிராதயம் எல்லாம்.மனுஷனுக்காக மதத்தை வளைக்கலாமே தவிர,மதத்திற்காக மனுஷன் வளைய கூடாது.அந்த பொண்ணு அப்படியே இருக்கட்டுமே.என்ன இப்போ?"
"சரிப்பா"
"அந்த பொண்ணு வீட்டுல என்ன சொல்றாங்க?"
"அவங்களுக்கு சம்மதம் தான்பா."
"அடுத்து என்ன பண்றதா உத்தேசம்"
"உங்களுக்கு சம்மதம்னா அடுத்து மாதமே இலஞ்சி முருகன் கோவிலில் வைத்து கல்யாணம் வைத்து விடலாம்.ரொம்ப எளிமையா செய்தா போதும்"
"சரிப்பா.எதுக்கும் அவங்க வழக்கப்படி சர்ச்சில் வைத்து ஒரு சின்ன விழா வைக்கலாமே?"
"தேவை இல்லபா.நான் ஏற்கனவே Jenifer-கிட்ட இத பத்தி பேசி இருக்கேன்".
"சரிப்பா.உன்னோட இஷ்டம்"
நிம்மதியாக உறங்க சென்றான் சுரேஷ்.சுரேஷின் அப்பாவிற்கு மனதில் ஒரு சின்ன வலி தெரிந்தாலும் அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.சுரேஷ் தனது முதல் சம்பளமாக அவரது கையில் கொடுத்த பணம்,அவர் retired ஆகும் போது வாங்கிய சம்பளம்.அப்பொழுதே அவருக்கு தெரிந்தது தனது மகனின் வாழ்கை முறை,தளம் எல்லாம் வேறு என்று.எதற்கும் தயாராகவே இருந்தார். கமலாமாள் புகைப்படம் முன்பு சென்று நின்றார்.
"என்னையே தனியா விட்டு விட்டு நீ மட்டும் சீக்கிரம் போயிட்டியே"
அடுத்தடுத்த நாட்கள் வேகமாக நகர தொடங்கியது.கல்யாண தேதி குறிக்கப்பட்டது.அழைப்பிதல் எதுவும் அடிக்கவில்லை.சுரேஷ்-இன் அப்பா நெருங்கிய உறவினர்களிடமும்,நண்பர்களிடமும் போன் செய்து விபரம் தெரிவித்தார்.
"என்ன சார் பைய்யன் இப்படி செய்திட்டான்?" என்று சோகமாக விசாரித்தவர்களிடம்,"இதுல என்ன சார் தப்பு இருக்கு?" என்று சிரித்து சமாளித்தார்.Jenifer குடும்பத்தில் ஏக களேபரம் நடந்தது.இந்த திருமணத்தில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும்,தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்றும் உறவினர்கள் தெரிவித்தார்கள்.Jenifer அப்பா எதற்கும் அசையவில்லை.மகள் சந்தோசம் தான் முக்கியம் என்பதில் தெளிவாக இருந்தார்.Jenifer அம்மா கணவன் என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று நம்புபவள்.எனவே கல்யாண வேலையை கவனிக்க தொடங்கினாள்.கல்யாண நாளும் வந்தது.Jenifer கழுத்தில் சுரேஷ் தாலி கட்டினான்.Jenifer வீட்டில் இருந்து அவள் அம்மா,அப்பா மட்டும் வந்திருந்தனர்.சுரேஷ் பக்கமிருந்து சில நண்பர்களும்,நெருங்கிய உறவினர்களும் வந்திருந்தார்கள்.மொத்தமே 50 பேர் தான் வந்திருந்தனர்.
"நமக்கு இருக்குது ஒரே பையங்க.அவன் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்தனும்" - கமலாமாள் அடிக்கடி சொல்வது சுரேஷ்-இன் அப்பாவிற்கு நினைவுக்கு வந்தது.
சுரேஷ்,Jenifer சென்னையில் வாழ்க்கையை தொடங்கினார்கள்.இரண்டு மாதம் கழித்து சுரேஷ் அமெரிக்கா செல்ல வேண்டிய நிலை வந்தது.Jenifer-yum கூட்டி கொண்டு கிளம்பினான்.அப்பாவை தன்னுடன் வருமாறு அழைத்தான்.மறுத்து விட்டார்.மேலும் 2 மாதங்கள் கழித்து,Jenifarin ஒன்று விட்ட சகோதரிக்கு திருமணம் நிச்சயகப்பட்டிருந்தது.Nazerth "புனித அந்தோனியார்" churchil வைத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.Jenifer அம்மா தான் முதலில் ஆரம்பித்தார்.
"என்னங்க,விஷேசத்துக்கு சம்மந்தியையும் கண்டிப்பா கூப்பிடனும்"
"நானும் அதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்"
"இதுல யோசிகிறதுக்கு என்னங்க இருக்கு.பெரிய மனிதர்.அவர கூப்பிடாம செய்தா நல்லா இருக்காது"
"அது சரி தாமா.Church-கெல்லாம் வருவார்னு தெரியலையே"
"நாம கூபிடரத கூப்பிடலாம்.அவருக்கு இஷ்டம் இருந்தால் வரட்டும்"
"சரி" அடுத்த நாளே போன் செய்து விபரம் தெரிவத்தார்.அவரும் கண்டிபாக வருவதாக ஒத்து கொண்டார்.
விழா நாள்.தென்காசியில் இருந்து பஸ் ஏறி nazerth வந்து இறங்கினார்.Church நோக்கி நடக்க தொடங்கினார்.ஆலய மணியின் ஓசை தொலைவில் கேட்டது.கருணையே வடிவான மேரி மாதாவின் உருவம் தெரிந்தது.Church-யை நெருங்கினார்.Jeniferin உறவினர்கள் சிலர் வெளியே நின்று இருந்தனர்.இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.வெளி கேட்-ஐ தாண்டி உள்ளே சென்றார்.இவரை பார்த்தும் Jeniferin அப்பாவும்,அம்மாவும் ஓடோடி வந்து வரவேற்றனர்.Jeniferin அப்பா இவர் கையை பிடித்து அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தார்.சிறிது நேரம் பேசி விட்டு மற்றவர்களை கவனிக்க சென்றார்.இவர் அங்கு நடந்த சடங்குகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.இவருக்கு எதுவும் புலப்படவில்லை,என்ன செய்வது என்றும் புரியவில்லை.எல்லோரும் எழுந்து நிற்கும் போது தானும் எழுந்து நின்றார்.எல்லோரும் அமரும் போது தானும் அமர்ந்தார்.எல்லோரும் கண் மூடி பிரார்த்திக்கும் போது,தானும் கண் மூடி அமர்ந்திருந்தார்.தான் எதாவது தவறாக செய்து அது அவர்களை காயப்படுத்தி விடுமோ என்று மிகவும் எச்சரிக்கையோடு இருந்தார். அன்று முருகன் கோவிலில் Jenifarin அப்பாவும்,அம்மாவும் இதே அவஸ்தையை தானே அனுபவித்து இருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது மனது கனத்தது.விழா முடிவடைந்தது.அருகில் உள்ள அரங்கத்தில் உணவு தயாராக இருந்தது.Jenfarin அப்பா இவரை அழைத்து சென்றார்.தனியாக அமர்ந்து பேருக்கு சாப்பிட்டு விடு விடை பெற ஆயத்தமானார்.Jeniferin அப்பா,அம்மா வாசல் வரை வந்து வழி அனுப்பினர்.Jeniferin அப்பா இவர் வந்தது தனக்கு மிகுந்த சந்தோசம் என்று திரும்ப திரும்ப கூறி கொண்டே இருந்தார்.பஸ் பிடித்து ஊருக்கு வந்தார்.வீட்டை வந்தடைந்தார்.வாசலில் செருப்பை கழட்டி விட்டு,வீட்டினுள் நுழைந்தார்.கமலாமாள் புகைப்படம் முன்பு போய் நின்றார்.
"நல்ல வேலை நீ சீக்கிரம் போய் சேர்ந்துட்ட"
(குறிப்பு : "காதலை எதிர்க்கும் பெற்றோரை வில்லன்கள் ஆகவே சித்தரிக்கும் இந்த சமூகமும்,ஊடகங்களும்,ஏன் காதலை ஆதரிக்கும் பெற்றோரின் நியாயமான தயக்கங்களையும்,தடுமாற்றங்களையும்,சங்கடத்தையும் பதிவு செய்வது இல்லை" என்ற எனது கேள்விக்கான தேடல் தான் இந்த கதை.மற்றபடி யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை)
- தரன்

காதலிக்கும் போது பெத்தவங்கள மறந்திடுறாங்க.
ReplyDeleteகல்யாணத்துக்கு அப்புறம் பெத்தத மறந்திடுறாங்க.
இது எப்படி இருக்கு .....
hey dhamo unakulla ipdi oru sindhanaiyua. unooda palli nanban enbadhil peurmaiyaha irukiradhu :-)
ReplyDelete