IT நாடோடிகள்

IT நாடோடிகள்
சசிகுமார்,பரணி,விஜய் மூவரும் வேறு வேறு IT கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள்.ஒரு நாள் சசிகுமார் வீட்டுக்கு வரும் அவனது நண்பர்கள் பாலா மற்றும் அருண் இருவரும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் பாதி நாள் வேலை இல்லை என்றும் "career growth" நினைச்சு ரொம்ப பயமாக இருக்கிறது என்றும் புலம்புகிறார்கள்.பரிதாபப்படும் சசிகுமார் பாலாவுக்கு தனது கம்பெனி-லயும்,பரணி அருணுக்கு தனது கம்பெனி-லயும்,refer செய்து வேலை வாங்கி கொடுக்கிறார்கள்.ஒரு மாதம் கழித்து பாலா,"Onsite Oppurtunity" என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும்,அருண் வேலை "hectica" இருக்கு என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும் மாறி விடுகிறார்கள்.விஷயம் தெரிந்து டென்ஷன் ஆகும் சசிகுமார் குரூப்,என்ன செய்வதென்று கன்யாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே வைத்து discuss செய்கிறார்கள்.இறுதியாக இருவரையும் கடத்துவது என்றும்,ஆளுக்கு ஒரு "C++" program கொடுத்து எழுத செய்வது என்றும் முடிவெடுகிறார்கள்.ஆரம்பமாகிறது பர பர கிளைமாக்ஸ். "சம்போ சிவ சம்போ......................."
"வா வா" - உறுமுகிறார் சசிகுமார்.
"ஏண்டா nonaigalaa அன்னைக்கு டீம் outing போகும் போது இனிச்சுது,இன்னைக்கு கசக்குதோ?"
"என்னடா பேச்சு ப்ரோக்ராம் எழுத சொல்லுடா,#include " - ஓடி வருகிறான் பரணி.
"என்னடா சொன்ன ? Onsite Oppurtunitya? நீ என்னடா சொன்ன? hectica? hecticaaa?..கொன்னு பொதைசுருவேன்.
"Carrer Growthnu" சொல்லிட்டு ஏன்டா என் வீட்டுக்கு வந்த?.எனக்கு அமெரிக்கா-க்கு போகனும்னு சொல்லி இருந்தா நானே என் செலவுல flight book பண்ணி அனுபிச்சி இருப்பனடா?.
நீ என் friend, நான் refer பண்ணினேன்.இவன் ஏன்டா refer பண்ணினான்?.அவன் ஏன்டா resume forward பண்ணினான்?.நட்புடா.Friendshipda."
"அசிங்கபடுத்திடீங்கலடா......நாம தான் இந்த கம்பெனில சேர்ந்து உருபடாம போய்கிட்டு இருக்கோம்,நம்ம friendum சேர்ந்து உருபடாம போகட்டும் அப்படிங்கற நல்ல எண்ணத்துல,
நமக்கு வேலை போச்சுனா நம்ம friendukum போயிடும் அப்படிங்குற எதிர்பார்புல,
நம்ம friend டீம்ல ஒரு நல்ல பிகர் இருந்தா ,அவன் மூலமா அது நமக்கு வொர்க் அவுட் ஆகும்ங்க்ற நம்பிக்கைல தாண்டா எல்லாவனும் frienda refer பண்றான்."
"ஆனா நீங்க எல்லாம் அவங்கள ஏமாத்துறீங்க.அவங்க நினைச்சா ஒருத்தனுக்கும் வேலை கிடைக்காது.ஒரு மாசத்துக்கு ஒரு கம்பெனி-நு மாற முடியாது."
"இவிங்க சொன்னா கேக்க மாடங்கடா.ப்ரோக்ராம் எழுத சொல்லுடா.#include..." - பரணி ஓடி வருகிறான்.
"விடுடா என்னைக்கு நம்மள கேக்காம paper போடாங்க்களோ அன்னைகே இவங்க நம்ம friends கிடையாதுனு ஆகி போச்சுடா.வாடா...."
பாலாவும்,அருணும் அழுகிறார்கள். :-) :-)

Comments

Post a Comment

Popular posts from this blog

அவள்!

புரிந்துகொள்ளப்படாத உணர்வுகள்