அபார்ட்மெண்ட் அபத்தங்கள் - 1 - “முத்தையா” அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளில் தமிழ் தெரிந்த ஒரே ஆள் முத்தையா தான்.சேலத்துக்காரர்.கொரியர் ஏதேனும் வந்திருக்கா, EB பில் வந்திருக்கா என அத்தனை விசாரிப்புக்களும் முத்தையாவிடம் தான்.ஹிந்தி மட்டுமே தெரிந்த மற்ற செக்யூரிட்டிகளிடம் இதை எல்லாம் கேட்டு பதில் பெறுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். தினமும் இரவு வந்து அன்றைய நாளிதழை வாங்கி செல்வார்."காலையிலியே வந்து வாங்கிக்கோங்க" என்றால்,"இருக்கட்டும் சார்,காலையில ஆபீஸ் போற அவசரத்தில் பேப்பர் வாசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.சாயந்திரம் வந்து படிப்பீங்க. நான் காலையிலே பேப்பர் படிச்சு என்ன கலெக்டர் ஆகாவா போரேன்" என்று சிரித்து கொண்டே சென்று விடுவார். முத்தையாவிற்கு அறுபத்தி ஐந்து வயது இருக்கும்.ஊரில் மூன்று ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.ஆடி காத்தில் அம்மியே பறக்கும்போது ,அருகம்புல் என்ன செய்யும்.விவசாயத்தில் பெரும் நஷ்டம்.கிடைத்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு ,பெங்களுருவில் இருக்கும் மகன் வீட்டிற்கு வந்து விட்டார்.ஒரு ஹால் ,அதில் பாதியை மறைத்து சமையல் அறை என...
Posts
Showing posts from 2017