அபார்ட்மெண்ட் அபத்தங்கள் - 1 - “முத்தையா” அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளில் தமிழ் தெரிந்த ஒரே ஆள் முத்தையா தான்.சேலத்துக்காரர்.கொரியர் ஏதேனும் வந்திருக்கா, EB பில் வந்திருக்கா என அத்தனை விசாரிப்புக்களும் முத்தையாவிடம் தான்.ஹிந்தி மட்டுமே தெரிந்த மற்ற செக்யூரிட்டிகளிடம் இதை எல்லாம் கேட்டு பதில் பெறுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். தினமும் இரவு வந்து அன்றைய நாளிதழை வாங்கி செல்வார்."காலையிலியே வந்து வாங்கிக்கோங்க" என்றால்,"இருக்கட்டும் சார்,காலையில ஆபீஸ் போற அவசரத்தில் பேப்பர் வாசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.சாயந்திரம் வந்து படிப்பீங்க. நான் காலையிலே பேப்பர் படிச்சு என்ன கலெக்டர் ஆகாவா போரேன்" என்று சிரித்து கொண்டே சென்று விடுவார். முத்தையாவிற்கு அறுபத்தி ஐந்து வயது இருக்கும்.ஊரில் மூன்று ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.ஆடி காத்தில் அம்மியே பறக்கும்போது ,அருகம்புல் என்ன செய்யும்.விவசாயத்தில் பெரும் நஷ்டம்.கிடைத்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு ,பெங்களுருவில் இருக்கும் மகன் வீட்டிற்கு வந்து விட்டார்.ஒரு ஹால் ,அதில் பாதியை மறைத்து சமையல் அறை என...
Posts
அவள்!
- Get link
- X
- Other Apps
அவள்! பெங்களூர்,மடிவாலாவில் உள்ள அந்த பிக் பஜாரில்,வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு,பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.வாரக் கடைசி ஆதலால்,கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது.வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது.கால மாற்றதினாலும்,பொருளாதார மாற்றதினாலும்,அரிசி,பருப்பில் தொடங்கி காய்கறி வரை எல்லா பொருட்களும்,குளிரூட்டப்பட்ட அந்த ஒரே கட்டிடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.இனி என்ன செய்ய போகிறார்கள் மளிகைக்கடை அண்ணாச்சிகளும் ,கீரைக்கார அக்காக்களும் ,பால் கார பெரியம்மாக்களும் என்ற கேள்வி என்னுள் ஓடிக் கொண்டு இருந்தது.அப்பொழுது எனக்கு ரெண்டு பேருக்கு முன்னால் நின்று கொண்டு இருந்த பெண்,தனது கைத் தொலைபேசியில்,யாரிடமோ சன்னமான குரலில் தமிழில் பேசிக் கொண்டு இருந்தாள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு,பெங்களூர் வந்த புதிதில் யார் தமிழில் பேசினாலும் உடனே திரும்பி பார்க்க தோன்றும்.இப்பொழுது அப்படி இல்லை,தெருவோரக் கடைகளிலே தமிழில் பேரம் பேச முடிகிறது.அந்தப் பெண்,தமிழில் பேசியது என் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும்,அந்தக் குரல் எனக்க...
இவர்தான் மனிதர்
- Get link
- X
- Other Apps
"என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?" - திரு.நல்லகண்ணு "ஆனந்த விகடன்" பேட்டியில் கூறியது
IT நாடோடிகள்
- Get link
- X
- Other Apps
IT நாடோடிகள் சசிகுமார்,பரணி,விஜய் மூவரும் வேறு வேறு IT கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள்.ஒரு நாள் சசிகுமார் வீட்டுக்கு வரும் அவனது நண்பர்கள் பாலா மற்றும் அருண் இருவரும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் பாதி நாள் வேலை இல்லை என்றும் "career growth" நினைச்சு ரொம்ப பயமாக இருக்கிறது என்றும் புலம்புகிறார்கள்.பரிதாபப்படும் சசிகுமார் பாலாவுக்கு தனது கம்பெனி-லயும்,பரணி அருணுக்கு தனது கம்பெனி-லயும்,refer செய்து வேலை வாங்கி கொடுக்கிறார்கள்.ஒரு மாதம் கழித்து பாலா,"Onsite Oppurtunity" என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும்,அருண் வேலை "hectica" இருக்கு என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும் மாறி விடுகிறார்கள்.விஷயம் தெரிந்து டென்ஷன் ஆகும் சசிகுமார் குரூப்,என்ன செய்வதென்று கன்யாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே வைத்து discuss செய்கிறார்கள்.இறுதியாக இருவரையும் கடத்துவது என்றும்,ஆளுக்கு ஒரு "C++" program கொடுத்து எழுத செய்வது என்றும் முடிவெடுகிறார்கள்.ஆரம்பமாகிறது பர பர கிளைமாக்ஸ். "சம்போ சிவ சம்போ..........
என்னதான் பண்றோம்?
- Get link
- X
- Other Apps
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?.அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாபிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல,இங்கிலாந்து-ல இருக்குற Bank,இல்ல எதாவது கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.இவங்கள நாங்க "Client" nu சொல்லுவோம்." "சரி" "இந்த மாதிரி Client-a மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.இவங்க பேரு "Sales Consultants,Pre-Sales Consultants....".இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?.ஆயிரத்தெட்டு கேள...
புரிந்துகொள்ளப்படாத உணர்வுகள்
- Get link
- X
- Other Apps
February 14,2009,மெரினா பீச்.ஆயிற்று இன்றோடு இரண்டு வருடங்கள்,சுரேஷ் தனது காதலை ஜெனிபிர்-இடம் சொல்லி.முதலில் சிறிது போக்கு காட்டியவள் அப்புறம் சம்மதித்தாள்.அப்புறம் வழக்கம்போல் பீச்,பார்க் என்று காதல் வளர்ந்தது. "எத்தன நாளாதான் இப்படி கடலையே பார்த்து கிட்டு இருக்கிறது சுரேஷ்?" "போர் அடிச்சா சொல்லு,வேணும்னா இந்த பக்கமா திரும்பி உட்கார்ந்துக்கலாம்" "சும்மா நக்கல் பண்ணாத.எனக்கு வீட்டுல பைய்யன் பார்க்க ஆரம்பிச்சிடாங்க.இதுக்கு மேல delay பண்ண முடியாது" "அதுவும் கரெக்ட் தான்.வாங்குற சம்பளத்துல பாதி சுண்டலுகே போயிடுது" "வீட்டுல சரின்னு சொல்லுவாங்களா?கொஞ்சம் பயமா இருக்கு" "கஷ்டம் தான்.என்னதான் உலகம் முன்னேறினாலும்,காதல்னா பேரெண்ட்ஸ் கொஞ்சம் பயப்பட தான் செய்யுறாங்க.நாம வேற,வேற வேற மதம்.பார்க்கலாம்.தெரிஞ்சுதான லவ் பண்ணினோம்." "hm..ஆனா ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி பேரெண்ட்ஸ் சம்மதத்தோட தான் நம்ம marriage பண்ணனும்." "கண்டிபா.சரி கிளம்பலாம்.நீ உங்க வீட்டுல மெதுவா பேச்ச ஆரம்பி.நான் அடுத்த தடவை ஊருக்கு போகும் போது அப்பாகிட்ட பே...